கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரியவரும் என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.