வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முதலாவது ‛ஐ2யூ2′ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‛நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய 6 முக்கியமான துறைகளில் கூட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக’ கூறியுள்ளார்.
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ‛ஐ2யூ2′ குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் உச்சி மாநாடு இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில், நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீடு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த முதல் உச்சி மாநாட்டிலிருந்து, ‛ஐ2யூ2′ ஒரு நேர்மறையான திட்டங்களை நிறுவியுள்ளது. நாங்கள் பல்வேறு துறைகளில் கூட்டுத் திட்டங்களைக் கண்டறிந்து, முன்னோக்கிச் செல்வதற்கான வழிமுறைகளை தயாரித்துள்ளோம்.
நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய 6 முக்கியமான துறைகளில் கூட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இதன்மூலம் இந்த உச்சி மாநாட்டின் பார்வை மற்றும் திட்டங்கள் முற்போக்கான மற்றும் நடைமுறையானது என்பது தெளிவாகிறது. நமது பரஸ்பர பலம், மூலதனம், நிபுணத்துவம் மற்றும் சந்தைகளை அணிதிரட்டுவதன் மூலம், நமது திட்டங்களை விரைவுபடுத்தி, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement