பெங்களூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை சேர்ந்த நிகில் என்ற 23 வயது வீரர் கலந்துகொண்டார். நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகிலின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

Nikhil , a 23-yr old kickboxer died after being hit by an opponent while taking part in a competition in #bengaluru

Video shows him lying motionless in the ring

Coach says He could have been saved if there were medical personnel/ambulance on site

Family seeks action pic.twitter.com/gcCVbvVUdx
— Sidharth.M.P (@sdhrthmp) July 14, 2022

இதையடுத்து நிகிலை போட்டி ஏற்பட்டாளர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதைக்கேட்ட நிகிலின் குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் நிகிலுக்கு முதலுதவி வழங்கவில்லை என்றும் குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினர் இல்லை என்றும் நிகிலின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து அலட்சியத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக குத்துச்சண்டை போட்டி ஏற்பட்டாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 10 ஆம் தேதி நடந்த இந்த போட்டியின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: ஆள் கடத்தல் வழக்கு: பிரபல பஞ்சாப் பாடகருக்கு இரண்டு ஆண்டு சிறைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM