ஓ.பன்னீர்செல்வத்தின் இரு மகன்கள் உள்ளிட்ட 18 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சையதுகான், எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்ட 5 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பன்னீர்செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப், செய்தித் தொடர்பாளர்களான கோவை செல்வராஜ், மருது அழகுராஜ் உள்ளிட்டோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.