கள்ளச் சந்தைக்கு கடத்தப்படும் உக்ரைன் ஆயுதங்கள்…ஐரோப்பிய யூனியனுக்கு பரவும் அபாயம்!


உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் அந்த நாட்டில் உள்ள கிரிமினல் குழுக்களின் கைகளில் சிக்கி, அவை நாட்டிற்கு வெளியேயும், ஐரோப்பாவின் கள்ளச் சந்தைக்கும் கடத்தப்படுவதை தடுக்கும் சிறப்பு கண்காணிப்புக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அழுத்தம் தர தொடங்கியுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, சிறிய ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் கவச வாகனங்கள் முதல் துப்பாக்கிகள் மற்றும் பரந்த அளவிலான வெடிமருந்துகள் என சுமார் 10 பில்லியன் டாலாருக்கும் அதிகமான இராணுவ ஆதரவை மேற்கத்திய நாடுகள் வழங்கியும் இனியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

உக்ரைனுடன் பல நோட்டோ உறுப்பு நாடுகள், அனுப்பப்பட்ட ஆயுதங்களின் பட்டியல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்து விவாதிக்கின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

EU வின் சட்ட அமலாக்க முகவரான Europol, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வழங்குவதற்காக உக்ரைனில் இருந்து ஆயுதக் கடத்தல் தொடங்கியுள்ளதாகவும் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதன் விசாரணைகள் ஏப்ரல் மாதம் தெரிவித்தது.

மேலும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர், நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் யூரோபோல் அரசாங்கங்களுக்கு அனுப்பிய விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கள்ளச் சந்தைக்கு கடத்தப்படும் உக்ரைன் ஆயுதங்கள்...ஐரோப்பிய யூனியனுக்கு பரவும் அபாயம்! | Risk Of Ukraine Weapons Smuggling Nato Eu Warns

இந்தநிலையில், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் போனி டெனிஸ் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் தவறான கைகளில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் “பல பரிசீலனைகளுக்கு மத்தியில்” நாட்டில் நிலவும் சவாலான சூழ்நிலை என்று ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்…உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் திசைதிருப்பல் அல்லது சட்டவிரோத பெருக்கத்தைத் தடுப்பதற்கும் அமெரிக்கா எங்கள் பொறுப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும் உதவுகிறது என்றும் ஜெலென்ஸ்கி பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.