அகமதாபாத்: குஜராத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நவ்சாரி, வல்சாத், டாங், நர்மதா, சோட்டா உதேபூர், பஞ்ச் மகால் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள் ளன. சுமார் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழை தொடர்பான சம்பவங்களில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு உயரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 18 குழுக்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.