திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் எச்சாிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்று அட்டப்பாடி. அங்குள்ள அகழி பஞ்சாயத்து பட்டிமாளம் கிராமத்தில் யானை கூட்டமானது மலைப்பகுதியிலிருந்து சமவெளி பகுதிக்கு வந்துள்ளது. அப்பகுதி மக்கள் எடுத்துள்ள யானை கூட்டங்களின் வீடியோ காட்சி சமூக வளைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த யானைகள் கோடை காலங்களில் புதா் காடுகளில் வசிப்பவை. தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரக் கூடிய கால சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த அட்டப்பாடி பகுதி கோவை வனக்கோட்டத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் அப்பகுதியிலிருந்து யானைகள் அட்டப்பாடி வழியாக நிலகிாி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய நிலையில், தற்போது இந்த யானை கூட்டம் அட்டப்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானைக்கூட்டங்கள் அங்குள்ள மலை கிராமங்களில் நடமாடுவதற்கான வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் அப்பகுதி மக்களை வனத்துறையினா் மிக கவனத்துடன் இருக்குமாறு எச்சாித்துள்ளனா். இன்று காலை காட்டு யானையானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. எனவே, யானை கூட்டங்களை தற்போது குடியிருப்பு பகுதிக்குள் செல்ல விடாமல் வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுப்பட்டுள்ளனா். தற்போது யானை கூட்டமானது பட்டிமாளம் என்ற மலைக்கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்கள் ஒட்டிய பகுதிகளில் யானை கூட்டங்கள் நடமாடும் காரணத்திற்காக அப்பகுதி மக்கள் எச்சாிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.