சத்தமில்லாமல் டென்மார்க் நிறுவனத்தை தூக்கிய இன்போசிஸ்.. சலில் பாரிக் மாஸ்..!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், டென் மார்க்கினை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தினை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், டென்மார்க்கினை தலைமையிடமாகக் கொண்ட, பேஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தினை 110 மில்லியன் யூரோக்களுக்கு (875 கோடி ரூபாய்க்கு) வாங்குவதாக தெரிவித்துள்ளது.

முத்தான இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் காணலாம்!

இந்த கையகப்படுத்தலானது லைஃப் சயின்ஸ் துறையில் தன்னை மேம்படுத்திக் கொள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு பயன்படும் என்றும், ஐரோப்பாவில் அதன் இருப்பினை மேற்கொண்டு வலுப்படுத்திக் கொள்ள பயன்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து விரிவாக்கம்

தொடர்ந்து விரிவாக்கம்

இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் தற்போது தங்களின் இருப்பினை தொடர்ந்து ஐரோப்பிய பகுதிகளில் வலுப்படுத்தி வருகின்றன. சில இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே ஐரோப்பிய பகுதிகளில் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய சந்தைகளில் ஐடி தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் விரிவாக்கம் செய்து வருகின்றன.

 இன்ஃபோசிஸ் குடும்பத்திற்கு வரவேற்பு

இன்ஃபோசிஸ் குடும்பத்திற்கு வரவேற்பு

தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிக்கு எளிதில் சேவையினை கொடுக்கும் விதமாகவும், விரைவாக முடித்துக் கொடுக்கும் விதமாக வாடிக்கையாளர்களின் அருகிலேயே தங்களின் இருப்பினை நிறுவி வருகின்றன.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவி குமார், பேஸ் லைஃப் சயின்ஸை, இன்ஃபோசிஸ் குடும்பத்திற்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.

 

எப்போது முடியும்?
 

எப்போது முடியும்?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த கையகப்படுத்தல் திட்டமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ், வணிகம், மெடிக்கல், டிஜிட்டல் மார்கெட்டிங், மருத்துவம் என தரமான திறன் கொண்ட டொமைன் நிபுணர்களை இன்ஃபோசிஸ் -க்கு வழங்குகிறது. இது தவிர பேஸ் நிறுவனம் டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவற்றில் மேம்ப்பட்டு உள்ளது. மேலும் தற்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.

 

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்த நிறுவனம் டென்மார்க், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள தொழில் நுட்ப மையங்களில் சுமார் 200 சிறந்த பல்துறை வல்லுனர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் பேஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் கூட்டணி என்பது மேற்கொண்டு அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பயனபடும். இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

infosys plans acquire Denmark based BASE life science for Rs.875 cr

infosys plans acquire Denmark based BASE life science for Rs.875 cr/சத்தமில்லாமல் டென்மார்க் நிறுவனத்தை தூக்கிய இன்போசிஸ்.. சலில் பாரிக் மாஸ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.