சத்ய நாடெல்லா நீங்களுமா.. கூகுள் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல..!

கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பணவீக்கம் என்ற மாய அரக்கன் அனைத்தையும் அசைத்து கொண்டிருக்கிறான். பல நிறுவனங்கள் தற்போது தங்களுடைய ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 1800 பேரை வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு ஊழியர்கள் கண்ணீர் வடிக்கும் நிலைமைக்கு தள்ளியுள்ளது.

1800 பேர் பணிநீக்கம்

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணிபுரியும் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் தொடர்ந்து புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் என்றும், நடப்பு நிதியாண்டில் அதிகமான பணியாளர்களை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு சதவீதம் வேலைநீக்கம்

ஒரு சதவீதம் வேலைநீக்கம்

தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 1.80 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில் அவர்களில் சுமார் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1800 என்பது பெரிய எண்ணாக தெரிந்தாலும், மொத்த ஊழியர்களில் ஒரு சதவீதம் தான் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளக்கமாக உள்ளது.

மைக்ரோசாப்ட்
 

மைக்ரோசாப்ட்

தற்போது நாங்கள் சிறிய எண்ணிக்கையிலான பணி நீக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அனைத்து நிறுவனங்களை போல் நாங்களும் எங்கள் வணிக முன்னுரிமைகளை அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம்’ என்று மைக்ரோசாப்ட் விளக்கம் தெரிவித்துள்ளது.

யார் யார் பணிநீக்கம்

யார் யார் பணிநீக்கம்

உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ஆலோசனையாளர்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு உடையவர்கள் மற்றும் சில பிரிவுகளில் உள்ளவர்கள் வேலையிழந்துள்ளதாக தெரிகிறது.

வணிகத்தில் முதலீடு

வணிகத்தில் முதலீடு

பணிநீக்கம் இருந்தபோதிலும், எங்கள் வணிகத்தில் முதலீடு செய்து, வரும் ஆண்டில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.

கூகுள் நிலை என்ன?

கூகுள் நிலை என்ன?

மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2022 ஆம் ஆண்டு முழுவதும் பணியமர்த்துவதை குறைக்கவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் பொறியியல், தொழில்நுட்பம் பிரிவுகளில் மட்டும் ஊழியர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

ட்விட்டர்

ட்விட்டர்

மேலும் ட்விட்டர் நிறுவனமும் தனது ஆள்சேர்ப்பு குழுவில் சுமார் 30% ஊழியர்களை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊபர், ஸ்னாப், இண்டெல், ஸ்பாடிஃபை, நிவிடியா, சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஆள்சேர்ப்பை குறைத்துள்ளன. நெட்ஃபிளிக்ஸ், ஆரக்கிள் நிறுவனம் செலவுகளை குறைக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Microsoft Cuts 1,800 Jobs as Part of restructuring process, to hire more..

Microsoft Cuts 1,800 Jobs as Part of restructuring process, to hire more.. | 1800 பேர்களை வீட்டுக்கு அனுப்பிய மைக்ரோசாப்ட்.. கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.