சம்பளம் குறைப்பு, இலவச உணவு கட்.. ஸ்டார்ட் அப் நிறுவனம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதால் செலவுகளை குறைப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சில நிறுவனங்கள் சலுகைகளை கட் செய்து வருகின்றன என்பதும் சில நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்தும், ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியும் வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான Unacademy என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு மட்டுமின்றி இலவச உணவு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இலவச உணவு, ஸ்னாக்ஸ் கட்

சமீபத்தில் 10%க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த Unanacademy நிறுவனம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 2,800 கோடி இருந்தும், லாபத்தில் கவனம் செலுத்துவதற்காக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. Unanacademy அலுவலகத்தில் தற்போது தந்து கொண்டிருக்கும் இலவச உணவு மற்றும் ஸ்னாக்ஸ்களை நிறுத்த நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால் உத்தரவிட்டுள்ளார்.

இனி பிசினஸ் வகுப்பு பயணம் இல்லை

இனி பிசினஸ் வகுப்பு பயணம் இல்லை

மேலும் உயர்மட்ட நிறுவனர்கள் மற்றும் உயர் நிர்வாகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இனி பிசினஸ் வகுப்பு பயணம் கிடையாது என்றும், உயர் அதிகாரிகளுக்கான தனிப்பட்ட ஓட்டுநர்களும் நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கனம்
 

சிக்கனம்

இதுவரை நாங்கள் சிக்கனத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது எங்கள் இலக்கு மாறிவிட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஓ செய்ய வேண்டும். மேலும் பணப்புழக்கத்தை நேர்மறையாக மாற்றியுள்ளோம். அதற்கு சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கௌரவ் முன்ஜால் கூறியுள்ளார்.

ரூ.2800 கோடி பணம்

ரூ.2800 கோடி பணம்

வங்கியில் ரூ.2,800 கோடிக்கு மேல் பணம் இருந்தும், நாங்கள் இன்னும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் தேவையற்ற செலவுகள் ஏராளம். இந்த செலவுகள் அனைத்தையும் குறைக்க வேண்டும் என்றும் கௌரவ் முன்ஜால் கூறினார்.

என்னென்ன நடவடிக்கைகள்

என்னென்ன நடவடிக்கைகள்

Unanacademy நிறுவனம் சிக்கன நடவடிக்கையாக அலுவலக ஊழியர்களுக்கு இனி இலவச சாப்பாடு கிடையாது என அறிவித்துள்ளது. அதேபோல் CXO, நிறுவனர்கள், பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட எவருக்கும் பிசினஸ் வகுப்பு பயணங்கள் கிடையாது. பிசினஸ் வகுப்பு விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் சென்று கொள்ளலாம். சம்பள குறைப்பு நடவடிக்கை இருக்கும். ஏற்கனவே ஒருசிலருக்கு சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மேலும் சிலருக்கு சம்பளம் குறையும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலதனம்

மூலதனம்

நாங்கள் ஒரு பெரிய நிலையில் இருந்தாலும், இது நம் வெற்றி கொள்ள வேண்டிய இறுதி எல்லை இல்லை. நாங்கள் நல்ல மூலதனத்தை கொண்டு இருக்கிறோம், ஆனால் இன்னும் எங்கள் வணிகம் லாபகரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனால் தான் இந்த சிக்கன நடவடிக்கை’ என்று முன்ஜால் கூறினார்.

அதிக லாபம்

அதிக லாபம்

சமீபத்திய செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததன் காரணமாக இந்த ஆண்டு நல்ல லாபத்தை Unanacademy நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போதைய சிக்கன நடவடிக்கைகள் காரணமாக வரும் காலங்களில் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pay Cut, No Free Meals, No Business Class.. Unacademy Cuts Unnecessary Expenses

Pay Cut, No Free Meals, No Business Class.. Unacademy Cuts Unnecessary Expenses | சம்பளம் கட், இலவச உணவு கட்.. ஸ்டார்ட் அப் நிறுவனம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்

Story first published: Thursday, July 14, 2022, 9:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.