சித்ரா ராமகிருஷ்ணா தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய முதலீட்டுச் சந்தையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா-வின் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணா மோசடி வழக்குகள் மெத்தனமாகவும், ஸ்லோவாகவும் நடத்தப்படுகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த 3 வாரத்தில் அடுத்தடுத்து விசாரணை, தண்டனை, அபராதம் என நீதிமன்ற அதிரடி காட்டி வருகிறது.

இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா மீது புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் முக்கியமான அனுமதியை வழங்கியுள்ளது.

கூகுள்-ஐ ஆட்டம் காண வைத்த 2K கிட்ஸ்.. இனி டிக்டாக், இன்ஸ்டா தான் எல்லாம்..!

சித்ரா ராமகிருஷ்ணா

சித்ரா ராமகிருஷ்ணா

என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா ஜூலை 14 ஆம் தேதி பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது. இந்நிலையில் முக்கியமான ஒரு வழக்கின் கீழ் சித்ரா-வை விசாரணை செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு

சட்ட விரோதமாகத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் தனிநபர் தகவல்களை உற்று நோக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் என்எஸ்இ எம்டி சித்ரா ராமகிருஷ்ணனை நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

அமலாக்க இயக்குனரகம்
 

அமலாக்க இயக்குனரகம்

இன்று முன்னதாக, NSE முன்னாள் தலைவர்கள் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் ஆகியோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) புதிய பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

சித்ரா கிருஷ்ணா மற்றும் நரேன் ஆகியோருடன், ஐசெக் சர்வீசஸ் மற்றும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீதும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.

கோ லெகோஷன் வழக்கு

கோ லெகோஷன் வழக்கு

சில நாட்களுக்கு முன்பு சித்ரா ராமகிருஷ்ணா மீதான கோ லெகோஷன் வழக்கு அல்லது Dark Fibre வழக்கில் முக்கியக் குற்றவாளி என அறியப்படும் சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு உட்படப் பலருக்கு செபி பல கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

செபி

செபி

செபி வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்எஸ்ஈ-க்கு 7 கோடி ரூபாய் அபராதமும், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் தொகையை அபராதமாக விதித்ததுள்ளது.

கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NSE illegal phone taping case, Chitra Ramakrishnan to four-day custodial interrogation

NSE illegal phone taping case, Chitra Ramakrishnan to four-day custodial interrogation சித்ரா ராமகிருஷ்ணா தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

Story first published: Thursday, July 14, 2022, 19:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.