எதைத் திண்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, எதை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை குறையும் என்று பலரும் தேடி வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த தகவல், சில துளி லெமன் ஜூஸ் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைத்து சுகர் பிரச்னைக்கு தீர்வு தருகிறது.
நீரிழிவு நோயாளிகளிடம் கசப்பானது எது என்று கேட்டால் அவர்கள் சர்க்கரையைத்தான் சொல்வார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரையை வெறுப்பவர்கள். அவர்களுக்காகவே, இந்த தகவல், எலுமிச்சை ஜூஸ் எப்படி இரத்தத்தில் அதிக அளவில் உள்ள குளுக்கோஸை கணிசமாகக் குறைக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் எலுமிச்சையை உணவில் சேர்த்துக்கொள்ள 5 வழிகளை இங்கே தருகிறோம்.
லெமன் ஜூஸ் ஒரு சக்திவாய்ந்த மருந்து. இது உங்கள் ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடிக்கடி திடீரென உயரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு, வழி இருக்கிறதா என்றால், சிட்ரஸ் பழமான எலுமிச்சை பழத்தில் காணப்படும் ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும்.
சில துளி லெமன் ஜூஸ், எப்படி இரத்தத்தில் உச்சத்தில் இருக்கும் குளுக்கோஸைக் கணிசமாகக் குறைக்கிறது. அந்த உச்சத்தை 35 நிமிடங்களில் குறைக்கும் என்பதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. எலுமிச்சை நீண்ட காலமாக அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் நீரிழிவு நோய்க்கான சூப்பர்ஃபுட் என்று கருதப்படுவதால் இது ஆச்சரியமான விஷயம் அல்ல.
“தினசரி உணவில் தேவையான ஆரோக்கியமான கூறுகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. எலுமிச்சை சாறு ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய்க்கான சிறந்த மீட்பராக செயல்படும் ஒரு சக்திவாய்ந்த மருந்து” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஹோமியோபதி ஆலோசகர் டாக்டர் ஸ்மிதா போயர் பாட்டீல்.
சர்க்கரை நோயாளிகளுக்கு எலுமிச்சை சரியான உணவு ஏன்?
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அதன் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
லெமன் ஜூஸில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. அதனால், இது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது. மேலும், லெமன் ஜூஸில் உள்ள வைட்டமின் சி இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை செரிமானத்திற்கு உதவும். சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எளிதான நார்ச்சத்து நிறைந்தது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஸ்மிதா பாட்டீல்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க சில துளி லெமன் மூலம் தீர்வு…
- உணவில் சில துளிகள் புதிய எலுமிச்சை சாற்றை பிழியுவது, உணவில் எலுமிச்சையை சேர்த்துக்கொள்ள எளிதான வழியாகும். அரிசி முதல் கறி வரை பாஸ்தா வரை எந்த உணவிலும் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கலாம். இது உணவுக்கு நல்ல சுவையையும் நறுமணத்தையும் தருகிறது. சில துளிகள் மூலம் சுவை அதிகரிக்கிறது. சாலட்களை சுவையானதாக மாற்ற எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
- நீரிழ்வு நோயாளிகளுக்கு வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் சிறந்த மருந்து. லெமன் ஜுஸ் தயாரிப்பது எளிதானது. இது புத்துணர்ச்சி அளிக்கிறது, தண்ணீரை மிதமாக அல்லது சாதாரண வெப்பநிலையில் வைத்து, அதில் அரை எலுமிச்சை சேர்க்கவும். எலுமிச்சை நீரைத் தயாரிக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எலுமிச்சையின் அதிகபட்ச பலன்களைப் பெற சர்க்கரை அல்லது பிற இனிப்புகளைச் சேர்க்க வேண்டாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
- எலுமிச்சம்பழத் துண்டுகளைக் கொண்டு உங்கள் சொந்த டீடாக்ஸ் தண்ணீரை தயாரிக்கலாம். இந்த டிடாக்ஸ் தண்ணீரை நாள் முழுவதும் பருகிக்கொண்டே இருங்கள். இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. எந்த நேரத்திலும் சர்க்கரை திடீர்ன உயர்வதை அனுமதிக்காது. எனவே, நீங்கள் எப்போதும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.
- எலுமிச்சை சாறு சேர்க்க மற்றொரு ஆரோக்கியமான வழி என்றால் அதை சாலட்டில் சேர்க்கலாம். இது சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது. எடையைக் குறைப்பதற்கான சக்திவாய்ந்த மூலப்பொருளாகவும் செயல்படுகிறது. சாலட்டில் போதுமான அளவு எலுமிச்சை சாற்றைப் பிழியுங்கள். ஆனால், எலுமிச்சையை அதிக அளவில் சாப்பிட்டால், அமிலத்தன்மையை ஏற்படுத்தும், எனவே அதை மிதமான அளவில் உட்கொள்ளுங்கள். ஏனென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை நீங்களும் அறிவிர்கள்.
- அரிசி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் மற்றும் சோளம் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம். ஏனெனில், இது உங்கள் உடலில் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதைக் குறைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”