சுஷ்மிதா சென்-லலித் மோடிக்கு விரைவில் 2வது திருமணம்? – புகைப்படங்களுடன் வைரலாகும் ட்வீட்

முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னும், தானும் காதலிப்பதாக, ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான லலித் குமார் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

இன்று பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் தொழிலதிபரும், கிரிக்கெட் நிர்வாகியுமான லலித் மோடி. பின்னர் இந்தப் போட்டி உள்பட பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டநிலையில், லலித் மோடி லண்டன் தப்பிச் சென்றார். அதன்பிறகு இவர் குறித்து பெரிதாக எதுவும் செய்திகள் வெளியாகாத நிலையில், தற்போது சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வாழ்க்கை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தாங்கள் இருவரும் டேட்டிங் மட்டுமே செய்துவருவதாகவும், விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சார்தீனியா, மாலத்தீவு போன்ற தீவுகளுக்கு இருவரும் சுற்றுலா சென்றுவிட்டு தற்போது மீண்டும் லண்டனுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தான், தனது நீண்ட நாள் காதலரான ரோஹ்மன் ஷாலுடனான காதலை முறித்துக்கொண்டதாக சுஷ்மிதா சென் தெரிவித்தநிலையில், தற்போது லலித் மோடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

56 வயதான லலித் மோடிக்கு, ஏற்கனவே மினால் என்பவருடன் திருமணமாகி விவாகாரத்து ஆகிவிட்டது. இந்த தம்பதிக்கு ஆலியா மோடி என்ற மகளும், ருச்சிர் மோடி என்ற மகனும் உள்ளனர்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.