சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: 7 நாட்களில் ரூ.11 லட்சம் வசூல்

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 7 நாட்களில் ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி கடந்த முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 நாட்களில் 2,340 நபர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருப்பதால், மக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க தீவிரமாக அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.