Viral Video: அறிவியல் அற்புதங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. அண்மையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
மிகவும் முக்கியமான விஞ்ஞான விஷயங்களை கொடுக்கத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வழங்கும் காட்சிகள் இனி உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாகப் போகிறது என்பது எதிர்கால வைரல் செய்தியாக இருக்கலாம்.
ஆனால், தற்போது நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அதை கட்டிடத்தில் காண்ப்பித்து அனைவரையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது பிரபல டைம் ஸ்கொயர் பில்டிங் நிர்வாகம். இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலகிறது.
மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!
சமூக ஊடகங்களில் நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பார்ப்பதற்கும், விண்ணளாவிய கட்டடத்தில் அதை வீடியோவாக பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வேறுபாட்டைப்போன்றே இருக்கிறது.
அந்த வீடியோவை இங்கு பார்க்கலாம்.
மனிதகுலத்தால் கட்டமைக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட தொலைநோக்கி வழங்கிய காட்சிகளும், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், பூமியில் வாழும் ஒரு உயிரினம் தான் மனிதன் என்ற உண்மையை உணர்த்துகிறது.
பால்வீதியில் உள்ள அண்ட பிரம்மாண்ட ரகசியங்களை வெளிக்கொணரும் தொலைநோக்கியின் சேவைகளின் முதல்கட்ட புகைப்படங்களை டைம் ஸ்கொயர் வெளியிட்டு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த வீடியோ வெளியானதில் இருந்து பார்த்தவர்களில் பலரும் பகிர, பகிர்ந்தவர்கள் மீண்டும் அதை லைக் செய்து பகிர என லட்சக்கணக்கானவர்களை ஈர்த்த பால்வீதி புகைப்படங்களின் வீடியோவாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | நீச்சல் குளத்தில் VIP எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய கடல் சிங்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR