டிவிட்டர் சேவை திடீரென முடங்கியது.. பறக்கும் ஹேஷ்டேக்..!

வியாழக்கிழமை பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ட்விட்டர் செயலிழந்தது உள்ளது.

இதனால் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் சில மணிநேரம் டிவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை உருவானதாகச் செயலிழப்புக் கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் டிவிட்டரில் பிப்ரவரிக்குப் பிறகு முதல் முறையாகச் செயலிழந்து உள்ளது.

டிவிட்டர் செயலிழப்பு மூலம் அமெரிக்காவில் 27,000 க்கும் மேற்பட்ட மக்கள் ட்விட்டரிலேயே புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து யுனைடெட் கிங்டம், மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பயனர்களும் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளனர்.

ஜியோ-வை வீழ்த்த கௌதம் அதானி-யின் தளபதி சுவேஷ்.. யார் இவர் தெரியுமா..?!

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் செயலி முடங்கியதிற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், சமுக வலைத்தளத்தில் இதுக்குறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. டெக் சேவை தளத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பான ஒன்றாக இருந்தாலும், இந்தச் சேவை துண்டிப்புக்கான காரணத்தைப் பொறுத்தே அதன் தாக்கத்தை உறுதி செய்ய முடியும்.

சேவை துண்டிப்பு

சேவை துண்டிப்பு

பிப்ரவரியில், ட்விட்டர் இதேபோன்ற சேவை துண்டிப்பைச் சந்தித்தது, இது அதன் பல ஆயிரக்கணக்கான பயனர்களின் சேவைகளைச் சீர்குலைத்தது. பின்னர், மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான டிவிட்டர் செயலிழப்பை ஏற்படுத்திய மென்பொருள் கோளாறை சரி செய்ததாகக் கூறியது.

$44 பில்லியன் ஒப்பந்தம்
 

$44 பில்லியன் ஒப்பந்தம்

டெஸ்லா நிறுவனத்தை வாங்குவதற்கான $44 பில்லியன் ஒப்பந்தத்தை மீறியதற்காக டெஸ்லா CEO எலான் மஸ்க் மீது ட்விட்டர் வழக்குத் தொடர்ந்த சில நாட்களுக்குப் பின், எலான் மஸ்க் கோரிக்கை டிவிட்டர் ஒப்புக் கொள்ளப்பட்ட படி 54.20 டாலர் என்ற கணக்கில் இணைக்க உத்தரவிடுமாறு டெலாவேர் நீதிமன்றத்தை டிவிட்டர் தரப்பில் கேட்டது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் டிவிட்டரை வாங்குவதற்காகத் தனது கையில் இருந்த டெஸ்லா பங்குகளில் சுமார் 96 லட்சம் பங்குகளைச் சராசரியாக 885 டாலருக்கு விற்பனை செய்தார். இந்தப் பங்கு விற்பனை மூலம் சுமார் 8.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டினார். தற்போது இந்தப் பணம் அவர் வங்கிக் கணக்கில் ராஜா போல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.

வீட்டு கடனை கட்ட முடியாது.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter outage: USA, United Kingdom, Mexico, Brazil, Italy facing Issue

Twitter outage: USA, United Kingdom, Mexico, Brazil, Italy facing Issue டிவிட்டர் சேவை திடீரென முடங்கியது.. பறக்கும் ஹேஷ்டேக்..!

Story first published: Thursday, July 14, 2022, 20:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.