டெஸ்லா உயர் அதிகாரி திடீர் ராஜினாமா.. எலான் மஸ்க் பதிலை பாத்தீங்களா..!!

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்யப்பட்டு வந்த நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வர்த்தகத் தலைவரை டெஸ்லா நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு lgbtq அதிகாரிகளை டெஸ்லா நிறுவனம் கட்டம் கட்டி தூக்கியது, இதில் டெஸ்லா நிறுவனத்திற்குப் பெரும் எதிர்ப்பை சம்பாதித்த நிலையில் எலான் மஸ் கள்ள தொடர்பில் உருவான இரண்டு குழந்தைகள், டிவிட்டரைக் கைவிட்ட செய்திகள் டெஸ்லா ஊழியர்களைப் பணிநீக்க செய்திகள் மற்றும் அதன் எதிரொலிகளைக் காற்றில் பறக்கவிட்டது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் முக்கியமான அதிகாரி வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் போனா என்ன.. எலான் மஸ்க் கையில் ஜாக்பாட் இருக்கு..!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதன் உயர்மட்ட நிர்வாகி தனது பதவி மற்றும் பணியை ராஜினாமா செய்துள்ளார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோபைலட் விஷன் குழுவின் இயக்குநரான ஆண்ட்ரேஜ் கர்பதி, இன்று ட்விட்டரில் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆண்ட்ரேஜ் கர்பதி

ஆண்ட்ரேஜ் கர்பதி

ஆண்ட்ரேஜ் கர்பதி வெளியிட்ட டிவிட்டில், “கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்லாவின் இலக்குகளை அடைய உதவுவதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, இதேவேளையில் டெஸ்லா-வை விட்டு பிரிந்து செல்வது என்பது மிகவும் கடினமான முடிவு. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் சமீபத்திய வெளியீட்டில் பெரு நகரங்களில் lane keeeping-ஐ சாதித்தது பெரும் மகிழ்ச்சி அடைகிறது. இதேபோல் டெஸ்லா-வில் வலுவான ஆட்டோ பைலட் குழு உள்ளதால் வெற்றி தொடரும்” என டிவீட் செய்துள்ளார்.

எலான் மஸ்க்
 

எலான் மஸ்க்

ஆண்ட்ரேஜ் கர்பதி-யின் டிவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக டிவிட்டர் மன்னன் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “உங்களுடன் பணியாற்றியது பெருமை அளிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

சவால்

சவால்

டெஸ்லா ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது, ஆண்ட்ரேஜ் கர்பதி-யின் வெளியேற்றம் டெஸ்லா ஆட்டோபைலட் பிரிவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய இடத்தைப் பிடிப்பது என்பதைத் தாண்டி ஈடு செய்வது என்பது டெஸ்லாவுக்குப் பெரும் சவால் தான்.

 ஆட்டோபைலட் மென்பொருள்

ஆட்டோபைலட் மென்பொருள்

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாதுகாப்பு நிர்வாகம், டெஸ்லாவின் தன்னியக்க மென்பொருள் மூலம் கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து 200க்கும் மேற்பட்ட விபத்துக்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறது.

குறைபாடு

குறைபாடு

தன்னியக்க பைலட் செயல்பாட்டுடன் வரும் டெஸ்லா வாகனங்களை இந்நிறுவனம் சமீபத்தில் திரும்பப் பெற்ற நிலையில் ஃபெடரல் ஏஜென்சி தன்னியக்க மென்பொருளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla’s head of AI and Autopilot Andrej Karpathy resign his job after 5 years

Tesla’s head of AI and Autopilot Andrej Karpathy resign his job after 5 years டெஸ்லா உயர் அதிகாரி திடீர் ராஜினாமா.. எலான் மஸ்க் பதிலை பாத்தீங்களா..!!

Story first published: Thursday, July 14, 2022, 17:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.