ஜூன் 2022ல் அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகப் புதன்கிழமை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டு உள்ளதால் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை அதிகளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் காத்திருந்து முடிவு எடுக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வியாழக்கிழமை வர்த்தகம் சரிவடையாமல் உயர்வுடன் துவங்கியுள்ளது.
குறிப்பாக இந்திய சந்தையில் நுகர்வோர் பொருட்கள், பார்மா நிறுவன பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற துவங்கியுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பார்மா பங்குகள் உயர் காரணமாக இருக்கலாம். இதேபோல் ஐடி பங்குகள் தொடர்ந்து சரிவிலேயே உள்ளது.
Jul 14, 2022 12:00 PM
சென்செக்ஸ் குறியீடு 16.23 புள்ளிகள் சரிந்து 53,497.92 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022 12:00 PM
நிஃப்டி குறியீடு 8.60 புள்ளிகள் சரிந்து 15,958.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022 11:59 AM
சவுதி அரேபியாவின் சலைன் வாட்டர் நிறுவனத்தின் 689 கோடி ரூபாய் திட்டத்தை வெல்ஸ்பன் கைப்பற்றியுள்ளது
Jul 14, 2022 11:59 AM
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கினாலும் சரிவுடன் முடிந்துள்ளது
Jul 14, 2022 11:59 AM
பொதுத்துறை வங்கிகளை மீண்டும் இணைக்க மத்திய அரசு திட்டம்.. ஆய்வுகளைத் துவங்க முடிவு
Jul 14, 2022 11:59 AM
டாடா மெட்டாலிங்க்ஸ் மோசமான காலாண்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளது
Jul 14, 2022 11:59 AM
Mindtree பங்குகள் 3.21 சதவீதம் சரிவு
Jul 14, 2022 11:59 AM
பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவு
Jul 14, 2022 11:59 AM
சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து 300 MW திட்டதை JSW நியோ எனர்ஜி கைப்பற்றியது
Jul 14, 2022 11:58 AM
டாபர் இந்தியா பங்களாதேஷ்-ல் இயங்கி வரும் ஏசியன் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தை மொத்தமாகத் தனது கிளை நிறுவனங்கள் மூலம் கைப்பற்றியுள்ளது
Jul 14, 2022 11:58 AM
ஸ்ட்ரைட்ஸ் பார்மா சையின்ஸ் பங்குகள் 4.05 சதவீதம் உயர்வு
Jul 14, 2022 11:58 AM
சனோபி இந்தியா பங்குகள் 3.76 சதவீதம் உயர்வு
Jul 14, 2022 11:58 AM
5000 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட HDFC வெள்ளிக்கிழமை பத்திரங்களை வெளியிடுகிறது
Jul 14, 2022 11:58 AM
சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து 600 MW திட்டத்தை டாடா பவர் நிறுவனத்தின் TP Saurya கைப்பற்றியது
Jul 14, 2022 11:58 AM
இன்போசிஸ் டென்மார்க் -ஐ சேர்ந்த BASE லைப் சயின்ஸ் நிறுவனத்தை 875 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது
Jul 14, 2022 11:58 AM
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிர்வாக குழு 21 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex Nifty live updates 14 july 2022: mindtree tata elxsi rupee covid crude gold USA june inflation
Sensex Nifty live updates 14 july 2022: mindtree tata elxsi rupee covid crude gold USA june inflation தடுமாறத் துவங்கிய சென்செக்ஸ்.. அமெரிக்கப் பணவீக்கம் 41 வருட உச்சம்..!