நடிகை சுஷ்மிதாவுடன் லலித் மோடி டேட்டிங்

புதுடில்லி: ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி , முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் டேடிங் செய்து வருதாக அறிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் லலித் மோடி 56. ‘ பிரீமியர் லீக், கிரிக்கெட் போட்டியை நடத்தியதில் பெருமளவு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடியை கைது செய்ய மத்திய அரசு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.


இந்நிலையில் லலித் மோடி தனது டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், 47 னுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடங்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் திருமணம் செய்துள்ளதாக அறிவித்தார். பின்னர் சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இறுதியாக ‘புதிய வாழ்க்கை தொடக்கம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்..
.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.