நிறுவனங்கள் எப்போது திருந்தும்.. 12வது மார்க் முக்கியமா..? பிடெக் மாணவனின் குமுறல்..!

பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்று ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் அப்போதெல்லாம் மாணவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் கல்லூரி படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது தான் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரியவரும்.

முத்தான இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் காணலாம்!

இந்த நிலையில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி மாணவர் 12ஆம் வகுப்பில் தன்னுடைய மதிப்பெண் குறைந்ததால் எந்த பெரிய நிறுவனம் தன்னைநேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

12ஆம் வகுப்பு மதிப்பெண்

12ஆம் வகுப்பு மதிப்பெண்

பொறியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் அவரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பிடெக்

பிடெக்

இது குறித்து அவர் மேலும் கூறும்போது ‘துரதிர்ஷ்டவசமாக நான் 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்று விட்டேன், அது என்னுடைய தவறுதான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது நான் பிடெக் ஐடி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். பிடெக் படிப்பில் இதுவரை எனக்கு நல்ல சதவீத மதிப்பெண்கள் உள்ளன.

மதிப்பெண்கள்
 

மதிப்பெண்கள்

இந்த நிலையில் எங்களுடைய கல்லூரிக்கு வேலைக்கு ஆள்கள் எடுக்க வரும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவர்களின் தகுதி அளவுகோல்கள் குறித்து பார்க்கும்போது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்றும் பொறியியல் துறையில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நேர்காணல்

நேர்காணல்

நான் 10ஆம் வகுப்பில் 85 சதவீதமும் இன்ஜினியரிங் படிப்பில் 75% பெற்றாலும் 12-ம் வகுப்பில் 54% மட்டும் பெற்றதால் நான் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலை தேடினாலும், எனது 12ஆம் வகுப்பு மதிப்பெண்ககளை பார்த்து என்னை நேர்காணலுக்கு அழைக்க மறுக்கின்றன.

பொறாமை

பொறாமை

என்னுடைய வகுப்பு தோழர்கள் எல்லாம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவதை நான் பொறாமையுடன் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

 வாத விவாதங்கள்

வாத விவாதங்கள்

இவருடைய பதிவை பார்த்து கல்லூரி படிப்பு முடித்த மாணவர் ஒருவரின் 10ஆம்வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது குறித்து வாத விவாதங்கள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் கருத்து

சமூக வலைத்தளங்களில் கருத்து

ஒரு இன்டர்நெட் பயனாளி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது ‘என் சகோதரனுக்கும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது என்றும், 10ஆம் வகுப்பில் அவருக்கு மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவர் பல நிறுவனங்களுக்கு இன்டர்வியூ அழைக்கப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போது அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

நிறுவனத்தை கண்டுபிடியுங்கள்

நிறுவனத்தை கண்டுபிடியுங்கள்

இன்னொரு நபர் இதுகுறித்து ‘நீங்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம். எந்த நிறுவனமும் நேர்காணலின்போது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை ஒரு பிரச்சனையாக பார்க்காது. உங்கள் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொருட்படுத்தாமல் உங்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனத்தை நீங்கள் கண்டுபிடியுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Engineering student says 12th class marks ruined job opportunities

Engineering student says 12th class marks ruined job opportunities |நிறுவனங்கள் எப்போது திருந்தும்.. 12வது மார்க் முக்கியமா..? பிடெக் மாணவனின் குமுறல்..!

Story first published: Thursday, July 14, 2022, 12:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.