வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிந்து-பாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்வது அதிகளவில் அரங்கேறி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவாஸி அஹமது நகரைச் சேர்ந்த 16 வயது ஹிந்து சிறுமி ஒருவர், சமீபத்தில் கடத்தப்பட்டார்
. இதையடுத்து, அவர் இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம்நபர் ஒருவருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.இதை அறிந்த ஹிந்து சமூகத்தினர், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வீட்டு முன் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும், சிறுமியை மீட்க ஆசிப் அலி சர்தாரி தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement