மஞ்சப்பை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ராகவன் தற்போது குழந்தைகளை கவரும் வகையில் மை டியர் பூதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவா பூதமாக நடித்துள்ள இந்த படத்தில் நம்யா நபீசன், அஸ்வந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழில் சில வருடங்களுகளுக்கு பிறகு குழந்தைகளுக்காக தயாராகியுள்ள மைடியர் பூதம் குழந்தைகளை கவரும் அளவுக்கு உள்ளதா? பார்க்கலாம்.
ஒரு புற்றுக்குள் தியானம் செய்யும் முனிவரின் தவத்தை பிரபுதேவாவின் மகன் கலைத்துவிடுகிறான். இதனால் கோபப்படும் முனிவர் அந்த சிறுவனுக்கு சாபம் விட்டுவிடுகிறார். இதை தெரிந்துகொண்ட பிரபுதேவா முனிவரிடம் கெஞ்சி தனது மகன் மீதான சாப்த்தை போக்கி விடுகிறார்.
அதற்கு பதிலாக பிரபுதேவா ஒரு பொம்மைக்குள் அடைக்கப்படுகிறார். சில வருடங்களுக்கு பிறகு அந்த பொம்மையில் இருந்து ஒரு சிறுவனால் விடுவிக்கப்படும் பிரபுதேவா தனது மகனை சந்தித்து அவனுடன் சேர ஆசைப்படுகிறார். ஆனால் தேவையான அனைத்தையும் செய்யும் பூதமாக இருக்கும் பிரபுதேவாவை வைத்து ஒரு காரியத்தை செய்ய சொல்கிறார் அந்த சிறுவன்
அது என்ன காரியம், பிரபுதேவா அதை செய்தாரா தனது மகனுடன் சேர்ந்தாரா என்பதை சொல்லும் படம்தான் மைடியர் பூதம். பூதம் கர்க்கியாக பிரபுதேவா தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் அவரது தோற்றமும் வித்தியாகமாக தான் உள்ளது. சிறுவன் திருநாவுக்கரசு கேரக்டரில் நடித்துள்ள அஸ்வந்த் படம் முழுவதும் பிரபுதேவாவுடன் பயணிக்கிறார்.
குழந்தைகளை கவர்வதற்காகவே எடுக்கப்பட்ட இந்த படம் முதல் பாதி குழந்தைகளுக்காகவும், 2-வது பாதி அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு அட்வைசாகவும் அமைந்துள்ளது சிறப்பு. அதேபோல் திக்குவாய் மாணவனாக நடித்து வரும் அஸ்வந்த் பள்ளியில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவது பிரபுதேவா வந்தவுடன் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பிரபுதேவ – அஸ்வந்த் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் ஸ்ராங்காக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது.
முதல் பாதி காமெடியும் 2-வது பாதி எமோஷ்னல் என இயக்கநர் ராகவன் மஞ்சப்பை பார்முலாவை அப்படியே கையாண்டுள்ளார். குழந்தைகளை மகிழ்விப்பதற்காக எடுக்கப்பட்டிருந்தாலும் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை நிச்சயமாக மைடியர் பூதத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். இமான் இசையும் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையாக பங்களிப்பை கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“