பிரிட்டன் பிரதமர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 88 வாக்குகள் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் வெற்றி பெற்றார்.
வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்பட 8 வேட்பாளர்கள் பிரதமர் பதவிக்காக போட்டி போட்ட நிலையில், 30 வாக்குகளுக்கும் குறைவாக பெற்ற இரு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரு கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர்.
6 பேர் பிரதமர் போட்டியில் நிடிக்கும் நிலையில் அதில் ரிஷி சுனக், Suella Braverman ஆகியோர் இந்திய வம்சாவளியினர். இன்று 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.