பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணி வகிப்பவர் இவர்தான்…


இந்திய வம்சாவளியினரும், முன்னாள் பிரித்தானிய நிதி அமைச்சருமான ரிஷி சுனக், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னணி வகிக்கிறார்.

ரிஷி, 88 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) 67 வாக்குகளும், வெளியுறவுச் செயலரான லிஸ் ட்ரஸ் (Liz Truss) 50 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரான Tom Tugendhat, முன்னாள் சமத்துவ அமைச்சரான Kemi Badenoch மற்றும் அட்டார்னி ஜெனரல் Suella Braverman ஆகியோரும் போட்டியில் நீடிக்கிறார்கள்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணி வகிப்பவர் இவர்தான்... | The Race To Become Britain S Next Prime Minister

முன்னாள் சுகாதாரச் செயலரான Jeremy Hunt மற்றும் கருவூல தலைவரான Nadhim Zahawi ஆகியோர், போட்டியில் நீடிக்கத் தேவையான 30 வாக்குகளைப் பெறத்தவறியதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அடுத்த சுற்று வாக்கெடுப்பு, இன்று (வியாழக்கிழமை) நடைபெறும். தேவையானால் அடுத்த வாரத்தில் இன்னொரு முறையும் வாக்கெடுப்பு நடைபெறலாம். அதாவது, கடைசியாக இருவர் மட்டுமே போட்டியில் நீடிக்கும் வரை இந்த வாக்கெடுப்பு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.