மன்னார் மாவட்டத்தில் இன்று (14) லிட்ரோ எரிவாயு ( LITRO GAS) வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து எரிவாயு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு இன்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன.
எரிவாயுவை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் குடும்ப அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மன்னார் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.