மருத்துவ துறையில் கொரோனா காலத்தில் நல்ல வளர்ச்சி கண்ட துறைகளில் மருத்துவ துறையும் ஒன்று. குறிப்பாக மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியினை கண்டன.
“டோலோ 650” கொரோனா காலத்தில் அதிகம் தேவைப்பட்ட மாத்திரைகளில் இதுவும் ஒன்று.
இதன் காரணமாக கொரோனா காலத்தில் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்றுள்ளதாகவும், இதன் மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலேயே தயாரான முதல் mRNA கொரோனா வைரஸ் தடுப்பூசி ஜெம்கோவாக்-19 .. விலை என்ன?
வருமான வரி சோதனை
கடந்த வாரம் மைக்ரோ லேப் நிறுவனத்தில் 9 மாநிலங்களில் 36 இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய ஆவணங்கள், பணம், நகை பறிமுதல்
குறிப்பாக பெங்களூரு அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், கணக்கில் காட்டப்படாத 1.20 கோடி ரூபாய் பணம், 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்காத செலவுகள்
இதில் ஆச்சரியத்தினையும், அதிர்ச்சியையும் அளிக்கும் விஷயம் என்னவெனில், மருத்துவ நிபுணர்களுக்கு இலவசமாக பரிசுகளை கொடுத்தன் பேரில், விற்பனை மற்றும் ஊக்குவிப்பு (Sales & Promotion) என்ற தலைப்பில் கீழ் அனுமதிக்க முடியாத செலவினங்களுக்கும் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன. இதற்காக மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வளவு வரி ஏய்ப்பா?
கொரோனா காலத்தில் இந்த நிறுவனம் மருத்துவ சந்தையில் முன்னணி வகித்த ஒரு நிறுவனமாகவும் இருந்தது. இப்படி ஒரு நிறுவனமாக இருந்த மைக்ரோலேப்ஸ் பல்வேறு வழிகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
Tax Raids on DOLO 650 maker: More than Rs.1000 crores prize for doctors and medical experts
Tax Raids on DOLO 650 maker: More than Rs.1000 crores prize for doctors and medical experts/மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் பரிசு.. Dolo 650 கொடுத்த செம ஆஃபர்..ஏன்?