கோட்டாபய மாலைதீவில் இருக்கும் நிலையில் அவர் தங்கியிருக்கும் சொகுசு விடுதி தொடர்பிலான ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நேற்று அதிகாலை மாலைத்தீவை சென்றடைந்தார்.
மாலைத்தீவில் உள்ள தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்ததாகவும், அங்கு ஒரு இரவு தங்குவதற்கு இலங்கையின் பணம் சுமார் 18 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையில் மாலைதீவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலைதீவு அரசு தனக்கு ஒரு தனி ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கோத்தபய கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.