சேலம்: 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,129ஆக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.