மொத்த பிரச்சனைக்கும் BBK தான் காரணமா.. சீன நிறுவனத்தின் மாஸ்டர் மைன்ட்..!

சமீபத்திய மாதங்களாகவே சீன நிறுவனங்களின் மீதான சோதனையானது தொடர்ந்து வருகின்றது. இதில் பற்பல மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஜியோமி, விவோ, ஒப்போ என அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருகின்றன.

தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!

சீனா இது குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், சீன நிறுவனங்கள் மீதான இந்த தொடர் நடவடிக்கை, சீன நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை குறைக்கலாம் என வெளியுறவு துறை கூறியிருந்தது.

பெரும் கவலை

பெரும் கவலை

தொடர்ந்து விவோ மற்றும் ஓப்போ ஆகியவை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன நிறுவனங்கள் எல்லாம் இந்த பட்டியலில் இடம் பெற போகின்றன. இது பல சீன நிறுவனங்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

விவோவின் வங்கி கணக்குகள் முடக்கம்

விவோவின் வங்கி கணக்குகள் முடக்கம்

கடந்த வாரம் விவோ நிறுவனத்தின் 10 இந்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் தொடர்பான 48 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர 23 இணை நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும் கடந்த ஜூலை 13 அன்று டெல்லி உயர் நீதி மன்றம் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை நிபந்தனைகளுடன் அனுமதித்தது.

 நிபந்தனையுடன் அனுமதி
 

நிபந்தனையுடன் அனுமதி

விவோவுக்கு வங்கி உத்தரவாதமாக 950 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதோடு வங்கிக் கணக்கில் எப்போதும் 250 கோடி ரூபாயினை வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

ஆக வங்கிக் கணக்குகள் அணுக அனுமதிக்கப்பட்டாலும், வங்கி உத்தரவாதம் என்பது மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும் எனலாம்.

 

ஒப்போ மோசடி

ஒப்போ மோசடி

இதே ஒப்போ இந்தியாவினை பொறுத்தவரயில் 4389 கோடி ரூபாய் சுங்க வரியினை ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் ஒப்போ இந்தியா அலுவலகம் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

பிபிகே டெக்னாலஜி

பிபிகே டெக்னாலஜி

விவோ மற்றும் ஒப்போ நிறுவனங்கள் பெரும்பாலும் போன்மேக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இவை இரண்டுமே பிபிகே டெக்னாலஜி (BBK Technology) என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் உள்ள பிராண்ட் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இது ஒப்போ, விவோ மட்டும் அல்ல, ஓன்பிளஸ், ரியல்மி, ஐகியூ உள்ளிட்ட பிராண்ட்களையும் கொண்டுள்ளது.

 மறைக்கப்பட்ட உண்மை

மறைக்கப்பட்ட உண்மை

பிபிகே எலக்ட்ரானிக்ஸ் என்பது 1995ம் ஆண்டில் ஒரு ரகசிய கோடீஸ்வரர் டிவான் யோங்பிங்கால் தொடங்கப்பட்ட டோங்குவானை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டதாகும். இது ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தியாளரான பிபிகே, இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் பின்னணியில் இருக்கும் ஒரு பிராண்ட் ஆகும்.

பிரபலமான பிராண்டா?

பிரபலமான பிராண்டா?

உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களாக சாம்சங், ஆப்பிள், மற்றும் ஜியோமி என பலவும் குறிப்பிடப்பட்டாலும், பெரியளவில் பிபிகே என்பது பெரியளவில் பிரபலமாகவில்லை. எனினும் கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு வரும் கனாலிஷ் ஆராய்ச்சி தரவுகளின் படி, ஒப்போ மற்றும் விப்வோவும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளார்களை நெருங்கிவிட்டன. சர்வதேச சந்தையில் ஒப்போ மற்றும் விவோ முறையே 10% மற்றும் 8% பங்கினை கொண்டுள்ளன.

இது ஒரு வியாபார யுக்தி

இது ஒரு வியாபார யுக்தி

பிபிகே சீனாவில் மற்றும் மிக பிரபலமான மிகப்பெரிய உற்பத்தியாளர் என்று கூறி விட முடியாது. இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளர் தான். இந்தியாவிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இப்படி பல அம்சங்கள் இருந்தும் பிபிகே இன்று வரையில் பெரியளவில் பிரபலமாகவில்லை என்பது தான் ஆச்சரியமே. எனினும் இது ஒரு தற்செயல்வான நிகழ்வு அல்ல. இது இந்த நிறுவனம் வகுத்த இரு யுக்தி என்று கூறப்படுகின்றது. நிச்சயம் இது ஒரு வியாபார தந்திரமாக கூட இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

BBK is behind Chinese brands like Vivo, Oppo and OnePlus

BBK is behind Chinese brands like Vivo, Oppo and OnePlus/மொத்த பிரச்சனைக்கும் BBK தான் காரணமா.. சீன நிறுவனத்தின் மாஸ்டர் மைன்ட்..!

Story first published: Thursday, July 14, 2022, 11:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.