மொத்த விலை பணவீக்கம் கணிசமாகச் சரிவு..!

இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88% ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 15.18% ஆகக் குறைந்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொத்த விலை பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து 15வது மாதமாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.

மொத்த விலை பணவீக்கம்

ஜூன் 2022 இல் கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக மொத்த விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம்

எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம்

எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவைப் பொறுத்தவரை, எண்ணெய் விலைகள் குறைந்ததால், மே மாதத்தில் 40.62 சதவீதமாக இருந்த WPI எண் ஜூன் மாதத்தில் 40.38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உணவுப் பணவீக்கம்
 

உணவுப் பணவீக்கம்

ஜூன் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தில் 10.89 சதவீதத்தில் இருந்து 12.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறி பணவீக்கம் 56.36% இல் இருந்து 56.75% ஆக உள்ளது. மே மாதத்தில் 10.11% ஆக இருந்த உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.19% ஆகக் குறைந்துள்ளது.

 சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

இந்தியாவில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது.

அமெரிக்கப் பணவீக்கம்

அமெரிக்கப் பணவீக்கம்

அமெரிக்காவில் புதன்கிழமை வெளியான பணவீக்க தரவுகள் அடிப்படையில் ஜூன் 2022ல் அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டது. அதன் பின்பு இப்போது தான் 9 சதவீத அளவீட்டைத் தாண்டி 9.1 சதவீத அளவீட்டைத் தொட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s June WPI inflation comes in at 15.18 percent; CPI inflation remained flat at 7.01 percent

India’s June WPI inflation comes in at 15.18 percent; CPI inflation remained flat at 7.01 percent மொத்த விலை பணவீக்கம் கணிசமாகச் சரிவு..!

Story first published: Thursday, July 14, 2022, 21:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.