அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இது தற்போது கிட்டதட்ட 80 ரூபாய் என்ற அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இது அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.1% ஆக அதிகரித்துள்ளது. இது 8.8% என்ற அளவு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எல்லாம் தலைகீழாய் மாறிப்போச்சு.. சீனா வேண்டாம் என ஒதுக்கியவர்கள் செய்த வேலையை பாருங்க?
வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
எனினும் எதிர்பார்ப்பினையும் தாண்டி பணவீக்கமானது மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு டாலரின் மதிப்பினை தூண்டலாம்.
ரெசசன் அச்சம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ரெசசன் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஏற்கனவே ரூபாயின் மதிப்பானது 6.5% சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ச்சியாக 4வது அமர்வாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது 80 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளனர்.
மக்களுக்கு செலவு அதிகரிக்கலாம்
இந்திய அதிகளவில் இறக்குமதியினை சார்ந்துள்ள நாடு என்பதால், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது மக்களின் பயன்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் தேவையானது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு மக்களுக்கு செலவினங்களை கூட்டலாம்.
இறக்குமதி பொருட்கள் விலை அதிகரிக்கலாம்
இறக்குமதிக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் , ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவினங்களை அதிகரிக்கலாம். இதனால் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு மின்னணு பொருட்கள், கார்கள், உதிரி பாகங்கள் என பலவற்றியின் விலையும் அதிகரிக்கலாம்.
வெளி நாடுகளில் கல்வி பயில்வோருக்கு பிரச்சனை
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது, வெளி நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் செலவினை கொடுக்கலாம். ஆக நீங்கள் முன்பு திட்டமிட்டிருந்ததை காட்டிலும் செலவு அதிகரிக்கலாம். ஆக வெளி நாடுகளில் சென்று படிக்க திட்டமிடும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.
வெளிநாடு சுற்றுலா செல்வோருக்கும் பிரச்சனை
வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், ஏற்கனவே திட்டமிருந்ததை விட கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். ஆக சுற்றுலா செல்ல திட்டமிட்டுருப்போர், அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். கூடுதலாக கையிருப்பில் வைத்துக் கொள்வது நல்லது.
மறைமுக தாக்கம்
தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயால், இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இது பங்கு சந்தையில் சரிவினை ஏற்படுத்தலாம். பங்கு சந்தைகள் சரியும் பட்சத்தில், பங்கு சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்டுகளும் சரிய காரணமாக அமையலாம். இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.அதே போல கடனிலும் ரூபாயின் மதிப்பானது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
யாருக்கு பலன்?
என் ஆர் ஐ-கள் இந்தியாவுக்கு பண பரிமாற்றம் செய்யும்போது, ரூபாயின் மதிப்பில் அதிகம் அனுப்பலாம். இது அவர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்றுமதி செய்வோருக்கும் கட்டணமாக ரூபாயில் செலுத்தப்படுவதால் அவர்களுக்கு பலன் கிடைக்கலாம்.
என்னபிரச்சனை?
அன்னிய செலவாணி என்பது குறைய வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு ரூபாய் சரிவுக்கு வழிவகுக்கலாம்.
அன்னிய முதலீடுகள் வெளியேற காரணமாக அமையலாம்.
What is the problem with rupee depreciation? What can increase the price?
What is the problem with rupee depreciation? What can increase the price?/ரூபாய் சரிவால் இவ்வளவு பிரச்சனை இருக்கா.. என்னென்னவெல்லாம் விலை அதிகரிக்க போகுதோ?