அகர்தாலா: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 750 கிலோ அன்னாசி பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார்.
இந்திய -வங்க தேச நட்புறவின் அடையாளமாக கடந்த சில தினங்களுக்கு முன் 600 கிலோ ஹரிபங்கா வகை மாம்பழங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு பரிசாக திரிபுரா மாநில முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா நேற்று 100 அட்டை பெட்டிகளில் 750 கிலோ அன்னாசி பழங்களை அனுப்பி வைத்தார். திரிபுரா மாநில வேளாண் உயர்திகாரி தீபக் தலைமையில் அதிகாரிகள், இந்திய வங்கதேச எல்லை பகுதியான அஹாவுரா சோதனைச்சாவடியில் வங்கதேச அதிகாரிகளிடம் அன்னாசி பழங்களை ஒப்படைத்தனர்.
இதே போன்று கடந்தாண்டு திரிபுரா முதல்வராக இருந்த பிப்லாப் குமார் தேவ், ஷேக் ஹசீனாவுக்கு 650 கிலோ அன்னாசி பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார். இதற்கு மாற்றாக, ஷேக் ஹசீனா, அந்நாட்டின் புகழ் பெற்ற ஹரிபங்கா மாம்பழங்களை பரிசாக இந்தியாவிற்கு அனுப்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement