வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி… இதயத்தை ப்ரீஸரில் பாதுகாத்த உக்ரைன் நபர்


உக்ரைனில் பிரபல சட்டத்தரணி ஒருவர் தமது வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிறப்புறுப்புகளை ப்ரீஸருக்குள் பாதுகாத்து வந்த நிலையில் பொலிசாரால் கைதாகியுள்ளார்.

உக்ரைனில் பிரபல சட்டத்தரணியாகவும், தொடர்புடைய நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து வருபவருமான Petr Begun என்பவரே இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.

வருங்கால மனைவியான 39 வயது Olha Davydenko என்பவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல பாகங்களில் வீசியுள்ளார் முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான Petr Begun.

வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி... இதயத்தை ப்ரீஸரில் பாதுகாத்த உக்ரைன் நபர் | Bridegroom Ripper Dismembered Wife Ukraine

இவர் உக்ரைனில் பிரபலமான திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராகவும் தெரிவாகியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட Olha Davydenko என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலைக்கு பின்னர், அவரது இதயம், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகங்களை ப்ரீஸருக்குள் பத்திரப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, பல நாட்களாக உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி... இதயத்தை ப்ரீஸரில் பாதுகாத்த உக்ரைன் நபர் | Bridegroom Ripper Dismembered Wife Ukraine

மட்டுமின்றி, கொல்லப்பட்ட பெண்ணின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் ஒரு பகுதி குளத்தில் வீசப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Olha Davydenko திடீரென்று மாயமான நிலையில், அவரது உடைகள் மற்றும் விரல் அடையாளங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பெடையெடுக்கும் முன்னரே இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
மட்டுமின்றி, இருவரும் பழகிய ஒரு வாரத்திலேயே Olha Davydenko குறித்த நபரின் குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி... இதயத்தை ப்ரீஸரில் பாதுகாத்த உக்ரைன் நபர் | Bridegroom Ripper Dismembered Wife Ukraine

Petr Begun மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என கூறுகின்றனர்.
இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.