போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.
வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ”இந்த மோதல்களில் வெடித்த கலவரத்தால், 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்,” என, தலைநகரின் துணை மேயர் ஜீன் ஹிஸ்லைன் பெடரிக் நேற்று முன்தினம் தெரிவித்தார்.கலவரத்தில், ‘ஜி – 9’ மற்றும் ‘ஜி – பெப்’ எனப்படும், இரண்டு போட்டி குழுக்கள் ஈடுபட்டு உள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement