தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
அதன்படி, காலை 5.30 முதல் 7. 45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராம பஞ்சாயத்துகளில் பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.