அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
தொடர்ந்து 4வது அமர்வாக வரலாற்று சரிவில் காணப்படுகின்றது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது மீளவே மீளாதா? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?
தொடர்ந்து இந்திய சந்தைகளில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இது பங்கு சந்தையில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளது.
இன்று ரூபாயின் நிலவரம்?
இன்று இந்திய ரூபாயின் மதிப்பானது 79.74 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் அதிகபட்சமாக 79.66 ரூபாய் என்ற அளவக்கு சரிவினைக் கண்டு இருந்தது. முடிவில் 79.62 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் ரூபாய் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து ஓள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
அமெரிக்காவில் எதிர்பார்த்ததை போலவே பணவீக்கமானது 4 தசாப்தஙளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் 9.1% என்ற அளவுக்கு மோசமாக அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு அமெரிக்காவின் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது டாலரின் மதிப்புக்கு சாதகமாக அமையலாம். இது ரூபாயின் மதிப்புக்கு எதிராக அமையலாம்.
ரெசசன் அச்சம்
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு கரன்சிகளின் மதிப்பு சரிய காரணமாக அமையலாம்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது பணவீக்கத்தினையும் தூண்டியுள்ளது. இது மேற்கொண்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மேலும் சரியலாம்
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
அதோடு சீனாவில் பரவி வரும் கொரோனா, ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை என பலவும் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கோண்டு பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆக இதுவும் ரூபாய் மதிப்பானது மேற்கொண்டு சரிய காரணமாக அமையலாம்.
உணவு பொருட்கள் விலை
மேலும் அடுத்த சில மாதங்களுக்கு உணவு பொருட்களின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு உக்ரைன் பிரச்சனை முடிவுக்கு வரும் பட்சத்தில் அப்போது குறையலாம்.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது ஏற்கனவே 100 டாலர்களுக்கு கீழாக உள்ளது. எனினும் ஏதேனும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருப்பின், அது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தற்போதைக்கு பிரச்சனை இல்லாவிட்டாலும், வரவிருக்கும் மாதங்களில் கச்சா எணணெய் விலை மேற்கோண்டு அதிகரித்தால், அதுவும் ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
Indian rupee hit nearly 80 per dollar/80-ஐ நெருங்கும் ரூபாய்.. இந்த மோசமான பயணத்திற்கு முடிவே இல்லையா.. மீண்டும் மீண்டும் வரலாற்று சரிவு!
Indian rupee hit nearly 80 per dollar
Indian rupee hit nearly 80 per dollar/80-ஐ நெருங்கும் ரூபாய்.. இந்த மோசமான பயணத்திற்கு முடிவே இல்லையா.. மீண்டும் மீண்டும் வரலாற்று சரிவு!