Apps: போலி வாட்ஸ்அப் செயலிகளால் ஆபத்து; எச்சரிக்கும் நிறுவனம்!

WhatsApp Users Alert: உடனடி செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் வில் கேத்கார்ட் செயலியின் போலி பதிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டில், செயலியின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் செயலிகளில் ஒன்றாகும். இந்த பயன்பாட்டில் கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனர்கள் உலாவி வருகின்றனர். எனவே, இணைய குற்றவாளிகள் வாட்ஸ்அப் பெயரைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி வருகின்றனர்.

வாட்ஸ்அப் செயலியை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்

சைபர் குற்றவாளிகள் வெவ்வேறு வழிகளில் பயனர்களை குறிவைத்து வருகின்றனர். வாட்ஸ்அப்பைப் போலவே சேவைகளை வழங்கும் பல போலி ஆப்கள் இருப்பதை அந்நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளதாக, வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாக அலுவலர் Will Cathcart தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த போலி செயலிகளில் மால்வேரை அவரது குழு கண்டறிந்துள்ளது. இந்தப் பயன்பாடுகள் Google Play Store-க்குப் பதிலாக பிற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

இதில், HeyMods, Hey WhatsApp போன்ற சில செயலிகளில் போலி வாட்ஸ்அப் பதிப்புகளும் அடங்கும். இந்தப் பயன்பாடுகள் கூடுதல் மற்றும் புதிய அம்சங்களை வழங்குவதாக விளம்பரம் செய்து பயனர்களை ஈர்க்கின்றன. ஆனால், இது பயனாளர்களின் போன்களில் உள்ள தகவல்களை திருட பயன்படுத்தப்படுகிறது.

போலி வாட்ஸ்அப் செயலிகள் பதிவிறக்கம்

மேலும் இது குறித்து கூகுளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் CEO தெரிவித்துள்ளார். எனவே இந்த போலி செயலிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளர்.

வாட்ஸ்அப்பின் போலி பதிப்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. பெரும்பாலும் பயனர்கள் இந்த பயன்பாடுகளை அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து கூடுதல் அம்சங்கள் கிடைப்பதாக நினைத்து பதிவிறக்கம் செய்கிறார்கள்.

கூகுள் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்டிருக்கும் போலி வாட்ஸ்அப் செயலிகளை Google Play Protect ஆனது கண்டறிந்து முடக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.