அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, சற்று முன்பு அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இந்த 18 பேர்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், ராமச்சந்திரன், அசோகன், ஓம் சக்தி, சேகர், கோவை செல்வராஜ், மருது அழகராஜ், ரமேஷ், வினிபாலன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அஞ்சுலட்சுமி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.