IND VS ENG match at The Lord’s cricket stadium live news update in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை அரங்கேறுகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிரடித் தாக்குதல் தொடுத்து இங்கிலாந்து அணியினரை கலங்கடித்தனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷ பந்துவீச்சில் மொத்த விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து 110 ரன்னில் சுருண்டது. ‘ஸ்விங்’ பந்துவீச்சு தாக்குலில் அட்டகாசப்படுத்திய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பேட்டிங்கில் தொடக்க வீரரான கேப்டன் ரோகித் மிரட்டல் அடி அடித்தார். அதிலும் அவருக்கு பிடித்த ‘புள்’ ஷாட்டை அதிக முறை அடித்து சிக்சருக்கு பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான தாவன் பொறுமையாக மட்டையை சுழற்றி தனது பாணியில் சில பவுண்டரிகளை ஓடவிட்டார். இந்த ஜோடி அசத்தல் பாட்னர்ஷிப் இந்தியா முதல் முறையாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாட உதவியது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் களமாடும். அணியில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. இடுப்பு வலியால் அவதிப்படும் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. முதலாவது ஆட்டத்தில் விக்கெட் வேட்டை நடத்த முடிவெடுத்த இந்தியா தொடர்ந்து வேகப்பந்துவீச்சிற்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இன்றைய ஆட்டம் நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நிலைமைகள் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இங்கிலாந்து மைதானங்களின் சீதோஷ்ண அடிக்கடி மாறுபவையாகும். மேலும், லார்ட்ஸில் இருக்கும் சாய்வு போன்ற அமைப்பும் ஒரு காரணியாக இருக்கலாம்.
சொந்த மண்ணில் தொடக்க ஆட்டத்தில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தில் சீறும் பாம்பாய் படமெடுத்தாட காத்திருக்கிறது. இதனால், இந்திய அணி போல் இங்கிலாந்தும் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் முந்தைய ஆட்டத்தில் நடந்ததை தவிர்க்கவும், முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடவும் திட்டமிட்டு வருகின்றனர்.
ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில், இங்கிலாந்து அணியினர் சொந்த மண்ணில் அணியின் பலத்தை நிரூபிக்க போராடவர். இதனால் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
India in England, 3 ODI Series, 2022Lord’s, London 14 July 2022
England
India
Match Yet To Begin ( Day – 2nd ODI ) Match begins at 17:30 IST (12:00 GMT)
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil