Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்
அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி. வேலுமணி ஆகியோரை நியமனம் செய்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக செயலாளர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் அமைப்பு செயலாளர்களாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையனும் நியமிக்கப்பட்டனர்.
ராமதாஸுக்கு கொரோனா
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இலங்கையில் அசாதாரண சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. http://tnpscexams.in என்ற இணையதள பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க, வரும் 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எட்டப்பர்களே காரணம். எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என விழுப்புரத்தில் இபிஎஸ் பேசினார். இந்நிலையில், யார் எட்டப்பர்கள் என்பதை தொண்டர்களும், மக்களும் முடிவு செய்வார்கள் என இபிஎஸ்-க்கு சசிகலா பதிலளித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர்கள் நியமனத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி, ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.