அகமதாபாத்- மும்பை புல்லட் ரயில்.. உத்தவ்தேவ் தாக்கரே செய்யாததை செய்து முடித்த ஏக்நாத் ஷிண்டே!

இந்தியாவின் நீண்ட நாள் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் வெகுவிரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத்- மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் தற்போது புதிதாக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய இருவரும் இந்த திட்டத்திற்கான முழு அனுமதியை அளித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.5000 கோடி புல்லட் ரயில் திட்டம்.. அலேக்கா தூக்கிய எல் அண்ட் டி..!

இந்தியாவில் புல்லட் ரயில்

இந்தியாவில் புல்லட் ரயில்

இந்தியாவின் மிகவும் லட்சியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் அமல்படுத்துவதில் தேக்கநிலை இருந்த நிலையில் புதிய மகாராஷ்டிர அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் அரசு வழங்கியுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் நிலுவையில் உள்ள சிக்கல்கள், வன அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ரூ. 1,10,000 கோடி பட்ஜெட்
 

ரூ. 1,10,000 கோடி பட்ஜெட்

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,10,000 கோடி என்றும், இதில் ரூ. 88,000 கோடி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) குறைந்த வட்டியில் அதாவது 0.01 சதவிகித வட்டியில் நிதியளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 2027 வரை காலக்கெடு

2027 வரை காலக்கெடு

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மெகா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இந்த லட்சிய திட்டத்தை முடிப்பதற்கான ஆரம்ப காலக்கெடு டிசம்பர் 2023 என்றும், அதன்பின்னர் 2026 என்றும், அதன் பின்னர் 2027 என்றும் மாற்றப்பட்டது.

நிலம் கையகப்படுத்துதல்

நிலம் கையகப்படுத்துதல்

மேலும் இந்த திட்டத்திற்கு தனியார், அரசு, வனம் மற்றும் ரயில்வே நிலம் என மொத்தம் 1,434.4 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 2021 நிலவரப்படி, தேவையான நிலத்தில் 30 சதவீதம் மட்டுமே மகாராஷ்டிராவில் NHSRCL அமைப்பால் கையகப்படுத்தப்பட்டது.

ஆமை வேகத்தில் உத்தவ் தாக்கரே அரசு

ஆமை வேகத்தில் உத்தவ் தாக்கரே அரசு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய அரசு இந்த திட்டத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக புனே மற்றும் நாக்பூர் நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்க ரயில்வே அமைச்சகத்திடம் தாக்கரே கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்தை உத்தவ்தேவ் தாக்கரே “வெள்ளை யானை” என்று கூட அழைத்தார்.

 புதிய அரசு

புதிய அரசு

இந்த நிலையில் அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில இடங்கள் கையகப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விரைவில் திட்ட பணிகள் வேகமெடுக்கும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் கூட்டாக அளித்த பேட்டியில் கூறி உள்ளனர்.

அதிவேக பயணம்

அதிவேக பயணம்

மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் 508.17 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேலும் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணிநேரமாக குறைக்கப்படும். மும்பை மற்றும் அகமதாபாத் இடையே மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும், அவற்றில் எட்டு குஜராத்தில் மற்றும் நான்கு மகாராஷ்டிராவில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. குஜராத்தில், வாபி, பிலிமோரா, பருச், சூரத், வதோதரா, அகமதாபாத், ஆனந்த் மற்றும் சபர்மதி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

 2 மணி நேரம் மட்டுமே

2 மணி நேரம் மட்டுமே

இந்த திட்டம் வெற்றிகரமாகக் முடிக்கப்பட்டால் புல்லட் ரயில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் 320 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும் என்றும், அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்ல வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ahmedabad-Mumbai Bullet Train Project.. All Clearances By Maharashtra Government!

Ahmedabad-Mumbai Bullet Train Project.. All Clearances By Maharashtra Government! | அகமதாபாத்- மும்பை புல்லட் ரயில்.. உத்தவ்தேவ் தாக்கரே செய்யாததை செய்து முடித்த ஏக்நாத் ஷிண்டே!

Story first published: Friday, July 15, 2022, 7:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.