இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்த பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் தேர்வில் இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டுவருகிறது.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலரும் போட்டியிட உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் , சுவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ்ட் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்ளிட்ட 8 பேர் போட்டியில் உள்ளனர்.
இதில் முதல் சுற்றில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 358 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 88 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவெல்லா பிரேவர்மனும் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றில் பங்கேற்கிறார். இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இரண்டாவது சுற்றில் மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அடுத்த வாரம் 3வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி புதிய பிரதமரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.