பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேத்தி நவ்யா நந்தா முதல் முறையாக நடித்துள்ள விளம்பரப் படத்தின் டீசர் வெளியானது.
அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா பச்சன் – நிகில் நந்தா தம்பதியின் மகள் நவ்யா நந்தா.
எஸ்கார்ட்ஸ் நிறுவன இயக்குனரான இவரது தந்தை நிகில் நந்தாவைப் போல் நவ்யா நந்தாவும் ஆரா ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தற்போது பிரபல அழகு சாதன பிராண்ட் ஒன்றுக்கு விளம்பர மாடலாக நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/CgBaLj4uG5_/
இந்த விளம்பரம் இன்னும் வெளியாகாத நிலையில், இதன் டீசரை இன்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நவ்யா.
இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலானதுடன் பலரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறார்.