புதுடெல்லி: பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையிலான வரைபடத்தைப் ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதனுடன் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘‘கடந்த ஐந்தாண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவீதத்தை இந்த வரைபடம் காட்டுகிறது. பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.