இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு! பல பிரிவுகளில் தமிழகம் முன்னணி – சென்னை ஐஐடி முதலிடம்…

டெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்  வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) உருவாக்கப்பட்டு, கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள்,  மாணவா்கள் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஆர்எஃப் தரவரிசை 2022 பட்டியல் இப்போது என்ஐஆர்எஃப் அதிகாரியிடம் கிடைக்கிறது. மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் இந்திய பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு, ஒரு புதிய வகை, ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது, மொத்த வகைகளின் எண்ணிக்கையை 11 ஆகக் கொண்டு சென்றது. NIRF தரவரிசை 2022 இல் பங்குபெறும் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 7,254 ஆகும், இது கடந்த ஆண்டு 6,272 பங்கேற்பாளர்களாக இருந்தது.

அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்காக சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

பொதுப்பிரிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் மேலாண்மை படிப்பில் 10வது இடத்தில் உள்ளது. பொதுப்பிரிவில், ஐஐஎஸ்சி பெங்களுரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

என்ஐஆர்எஃப் தரவரிசை பொறியியல் என்ஐடி திருச்சிராப்பள்ளி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.  தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NITT) NIRF இன்ஜினியரிங் தரவரிசை 2022 இல் 8வது இடத்தைப் பெற்றுள்ளது. சாதனைக்காக நிர்வாகம், ஆசிரியர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு நிறுவனம் டிவீட் மூலம் நன்றி தெரிவித்தது. NITT கட்டிடக்கலையில் 5வது ரேங்க் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் 21வது ரேங்க் பெற்றுள்ளது.

சிறந்த பல்கலைகழகங்கள் பிரிவில் முதலிடம் – ஐஐஎஸ்சி பெங்களுரு, 2-ஆம் இடம்- டெல்லி ஜேஎன்யு, 3 -ஆம் இடம் – ஜாமியா மில்லியா இஸ்லாமியா

சிறந்த பொறியியல் கல்லூரிமுதலிடம் – சென்னை ஐஐடி, 2-ஆம் இடம்- ஐஐடி டெல்லி – 3 -ஆம் இடம் – ஐஐடி மும்பை,

சிறந்த கல்லூரி பிரிவு: முதலிடம் – டெல்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாமிடம் – டெல்லி இந்துக் கல்லூரி, 3-ஆம் இடம் – சென்னை மாநில கல்லூரி

சிறந்த மருத்துவக்கல்லூரி பிரிவு: முதலிடம் – டெல்லி எய்ம்ஸ், 2-ஆம் இடம் – சண்டிகர் PGIMER, 3 -ஆம் இடம் – வேலூர் சிஎம்சி.

சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள்:  2வது இடம் – ஐஐடி, சென்னை, 10வது இடம் – விஐடி, வேலூர், 21வது இடம் – அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் கல்லூரிகள்: முதல் இடம் – ஐஐடி சென்னை, 8வது இடம் – என்ஐடி திருச்சி, 12வது இடம் – விஐடி வேலூர்

மேலாண்மை கல்லூரிகள்: 10வது இடம் – ஐஐடி சென்னை. 18வது இடம் – என்ஐடி திருச்சி 27வது இடம் – அமிர்தா வித்யாஸ்ரம் கோவை

பார்மஸி கல்லூரிகள்:  6வது இடம் – ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி, 12வது இடம் – எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை, 14வது இடம் – அமிர்தா வித்யாஸ்ரம் கோவை

மருத்துவக் கல்லூரிகள்:  3வது இடம் – கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர், 8வது இடம் – அமிர்தா வித்யாஸ்ரம் கோவை, 12வது இடம் – சென்னை மருத்துவ கல்லூரி சென்னை

பல் மருத்துவக் கல்லூரிகள்: முதல் இடம் – சவீதா கல்லூரி சென்னை, 8வது இடம் – எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை, 13வது இடம் – ராமசந்திர கல்லூரி சென்னை

கட்டிடக் கலைக் கல்லூரிகள்: 5வது இடம் – என்ஐடி திருச்சி, 11வது இடம் – எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை, 23வது இடம் – தியாகராஜர் கல்லூரி மதுரை

முழுமையான விவரங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.nirfindia.org/2022/OverallRanking.html

அதுபோல இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தர வரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி 3வது இடத்துக்கு வந்துள்ளது. லயோலா கல்லூரி 4வது இடத்தையும்,  கோவை  பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

முழுமையான விவரங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.nirfindia.org/2022/OverallRanking.html

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.