இனி அது நடக்கலாம்.. சாமானியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. தங்கம் விலை இன்று எவ்வளவு?

தங்கம் விலை குறையவே குறையாதா? குறைந்த விலையில் வாங்க வாய்ப்பே கிடைக்காத? 4 மாதத்திற்கும் மேலாக தொடரும் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை எப்போது தான் முடியும்?

குறிப்பாக கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

முத்தான இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் காணலாம்!

இந்த நிலையில் எதிர்பார்த்ததை போல அமெரிக்கவின் பணவீக்க தரவும் மீண்டும் அதிகரித்துள்ளது.

4 தசாப்தங்களில் இல்லாத உச்சம்

4 தசாப்தங்களில் இல்லாத உச்சம்

4 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது 9.1% ஆக அதிகரிதுள்ளது. இது அமெரிக்கர்கள் எரிபொருள், உணவு, ஹெல்த்கேர் மற்றும் வாடகை உள்ளிட்ட பலவும் உச்சம் எட்டியதையடுத்து, இந்தளவுக்கு மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

 கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம்

கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம்

எதிர்பார்த்ததை போல பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் கட்டாயம் , அமெரிக்காவின் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைக்க வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் தங்கம் வலையில் மேற்கோண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 20 வருட உச்சத்தில் டாலர்
 

20 வருட உச்சத்தில் டாலர்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது டாலரில் தங்கத்தினை வாங்குவோருக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இன்னும் வட்டி அதிகரிக்கும்போது இன்னும் டாலரின் மதிப்பு இன்னும் உச்சம் தொடலாம். இது மேற்கோண்டு தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.

தொடர் ஏற்றத்தில் பத்திர சந்தை

தொடர் ஏற்றத்தில் பத்திர சந்தை

அமெரிக்காவின் 10 வருட பத்திர மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது தங்கத்தில் செய்யும் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது. இது வட்டியில்லா வருமானம் என்பதால் இன்னும் முதலீடுகள் குறையலாம். எனினும் இனி வரவிருக்கும் வேலை குறித்தான தரவுகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

பணவீக்கம்

பணவீக்கம்

மேற்கண்ட பல காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் உள்ளது. ஆக இது பெரியளவில் சரிவினைக் தடுக்கலாம். மேலும் முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

டெக்னிலாக எப்படியிருக்கு?

டெக்னிலாக எப்படியிருக்கு?

டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. பணவீக்கத்தோடு கொரோனாவும் மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், இது மீண்டும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. அது இதுவும் தங்கத்தின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 7.80 டாலர்கள் குறைந்து, 1727.70 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் சற்று குறைந்து, 19.052 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்னும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி, 117 ரூபாய் குறைந்து, 50,685 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 232 ரூபாய் குறைந்து, 56,895 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தற்போது சற்று குறைந்து இருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 4676 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 37,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 5101 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 40,808 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,010 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 62.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 625 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 62,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.46,760

மும்பை – ரூ.46,900

டெல்லி – ரூ.46,900

பெங்களூர் – 46,950

கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,760

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price dips after US inflation data jump

gold price dips after US inflation data jump/இனி அது கன்ஃபார்ம்.. சாமானியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. தங்கம் விலை இன்று?

Story first published: Thursday, July 14, 2022, 11:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.