எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய பொன்னையன் மற்றும் ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை நீக்கி அறிக்கை வெளியீட்டு உள்ள நிலையில், மேலும் 44 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களை நீக்கி உத்தரவை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இவர்களை நீக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். கழக உடன் பிறப்புகள் இவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய பொன்னையன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அங்கு மாற்றங்கள் வர இருப்பதாகவும் கூறினார். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துதான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை சேர்த்து உள்ளதாகும் குற்றம் சாட்டினார். அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவர் சொத்து சேகரித்து குறித்து ஆதாரங்களை நாங்கள் வெளியிடுவோம் என்றும் கூறினார். நீக்கப்பட்ட பட்டியல் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளதாகவும் கோவை செல்வராஜ் கூறினார்
இதையும் படிக்கலாம்: கே.பி.முனுசாமிக்கு திமுக உதவியதா? பொன்னையன் ஆடியோவுக்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM