பொதுவாக இன்றைக்கு பலர் தூக்கமின்மை பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை.
சரியாக தூங்காமல் இருந்தால் பலநோய்கள் நம்மை வந்து தாக்கும். குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
எனவே இவற்றை முடிந்தவரை இதிலிருந்து விலகுவது நல்லது. இப்போது தூக்கமின்மை பிரச்சினைக்கு சூப்பரான வழி ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பிங்க் நிற இமாலய கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
- தேன் – 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும். இப்படி குலுக்குவதால், அந்த அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து, ஒரு ஒருபடித்தான கலவை கிடைக்கும். இந்த கலவையைக் கொண்டு தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.
இந்த கலவையை இரவில் படுக்கும் முன் அல்லது நடுராத்திரியில் எழும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை எடுத்து நாக்கிற்கு அடியில் வையுங்கள்.
அந்த கலவையை கரைவதற்குள், நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுவிடுவீர்கள். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள். இதை முயற்சித்தால் அசந்துபோய்விடுவீர்கள்.