இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள தீவிர பொருளாதார, அரசியல் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் நேற்று (14) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “இலங்கையின் எதிர்கொண்டுள்ள சவாலான நிலைமையை அவர் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நிலையின் அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியம் எனவும் மேலும் அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.