இலங்கை: அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா; மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு கடிதம்!

இலங்கையில் தற்போது நிலவிவரும் சூழலானது, நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, எமர்ஜென்சியை அமல்படுத்தும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதிலும் முக்கியமாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணிலும் பதவி விலகவேண்டும் என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

இலங்கை

இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச்சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சவுதி அரேபியாவுக்கு செலவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கோத்தபய, சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாக வெளியான செய்திக்கு, “தனிப்பட்ட முறையிலான பயணமாகத்தான் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் வந்துள்ளார். மேலும் சிங்கப்பூர், அவருக்கு அடைக்கலம் தரவில்லை” என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சே

அதைத்தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் இலங்கை சபாநாயகருக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரின் செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அடுத்தகட்டமாக, ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அதனைப் பரிசீலனை செய்ய சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.